விளக்குகளில் பலவகை ..


விளக்குகளில் பலவகை ..

விளக்குகளில் பல வகை உள்ளன.

1. நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு - குத்து விளக்கு.
2. தொங்கவிடப் பட்டிருக்கும் விளக்கு - தூக்கு விளக்கு.
3. கைகளில் தூக்கிச் செல்லும் விளக்கு - கை விளக்கு.
4. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு - தூண்டா மணி விளக்கு.
5. பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் விளக்கு - பாவை விளக்கு.

தீபம் தானாகவே அணையலாமா?
வீட்டில் தினமும் விளக்கேற்றி வழிபடுகிறோம். அதனை தானாகவே அணையவிடாமல்
 ஒரு மலரினால் அமைதிப் பெறச் செய்ய வேண்டும்

பூஜையில் எவர்சில்வர் விளக்குகளைப் பயன்படுத்தலாமா?
இரும்பு கலந்த எவர்சில்வர் விளக்குகளை பூஜை அறையில் பயன்படுத்தக்கூடாது.


துன்பத்தை கொடுப்பவை எவை?
தனிவழி செல்லுதல், தானறியாத நீர்நிலைகளில் குளித்தல், தன்னை நெருங்கிய நண்பரை பழித்தல், இடிந்த வீட்டில் உறங்குதல், நெருப்போடு விளையாடுதல் போன்றவை துன்பத்தைக் கொடுக்க கூடியவை.

காட்டு வழி போற பெண்ணே கவலைப்படாதே!

குங்குமம் எப்படி இட வேண்டும்?
குங்குமத்தை வலக்கை மோதிர விரலால் இட்டுக்கொள்வதே நல்லது.

காசிக் கயிறை ஆடவர், பெண்டிர் எப்படி அணியலாம்?
காசிக்கயிறு என்கிற கறுப்புக் கயிற்றை ஆடவர் வலது மணிக்காட்டிலும், பெண்கள் இடது மணிக்கட்டிலும் கட்டிக் கொள்ளலாம். (கட்டாயமாக பிதுர் கடன் செய்யும்போது இக்கயிற்றை அணியக்கூடாது).

தெய்வ சிலைகளை வீட்டில் வைத்துப் பூஜிக்கலாமா?
அதிகபட்சம் 8 அங்குல உயரம் உள்ள சுவாமி திருவுருவங்களை வீட்டில் வைத்து பூஜிக்கலாம்.

சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்யலாமா?
கோயிலில் சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்வதை விட, அனைவரும் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வதே நல்லது. ஏனெனில் அர்ச்சனை செய்யும்போது சொல்லும் மந்திரத்தில் சகல பாப - பீடா-பரிகாத்தம் என வரும் இது மனிதனுக்குத் தானே தவிர கடவுளுக்கு அல்ல!

காலையில் எழுந்ததும் எதன் முகத்தில் விழிக்க வேண்டும்?
காலை எழுந்தவுடன் எதன் முகத்தில் விழிப்பது யார் முகத்தில் விழிப்பது  என்கிற பிரச்சனையின்றி  லட்சுமி வாசம் செய்யும் உங்கள் உள்ளங்கைகளில் விழித்துக் கொள்ளலாம்.

மாதவிடாயின் போது பெண்கள் தெய்வ காரியங்களில் ஈடுபடலாமா?
பிரும்மஹத்யா தோஷம் என்பதே மாதவிடாய். இந்த நாள்களில் பெண்கள் தெய்வ காரியங்களிலும் விரதங்களிலும் ஈடுபாடின்றி இருப்பதே சிறந்தது.

வடக்கில் தலை வைத்து படுக்காலமா?
தெற்கே தலை வைத்துப் படுத்தாலும் படுக்கலாம். ஆனால் வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது.

சுவாமியை எப்பக்கம் பார்த்து வணங்கக் கூடாது?
தெற்கு பார்த்து சுவாமியை வணங்கக்கூடாது.
கோயில்களில் நெய் விளக்கு, எண்ணெய் விளக்கு.. எதை ஏற்றுவது நல்லது?
எதை ஏற்றினாலும் பலன் என்னவோ ஒன்று தான். தற்போது நெய்தீபம் ஏற்றுவது மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. தூய பக்தியோடு ஏற்றி வழிபட்டால் போதும் பலன் நிச்சயம். நெய் லட்சுமிக்குரியதாக இருப்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று சொல்வர்.
குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்<

விளக்கின் மகிமை கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.